பிசாசுகளின் ஜீவியமும், தரிசனங்களும் 51-07-21 1. அது இருந்தது... நான் என்னுடைய தாயாரின் வீட்டில் இருந்தேன், முழு இரவும் நான் அங்கு தங்க வேண்டியிருந்தது. நான் வியாதியஸ் தருக்காக ஜெபித்ததால் தாமதமாக வந்தேன். அதனால் நான் அம்மாவின் இடத்திற்கு சென்றேன். அவர்களிடம் பேசிவிட்டு, பின்பு நாங்கள் படுக்கைக்கு சென்றோம். நான் படுக்கைக்கு வந்த சிறிது நேரத்தில் - நான் விழித்து கொண்டேன். என்னால் இளைப்பாற முடியவில்லை. உங்களுக்கு அது போன்ற இளைப்பாற முடியாத இரவுகள் எப்பொழுதாவது இருந்ததுண்டா? கவனமாயிருங்கள். நீங்கள் ஒரு கிறிஸ்தவராயிருந்தால், ஒரு வேளை அது தேவன் உங்களோடு தொடர்பு கொள்வதாய் இருக்கலாம். பாருங்கள்? ஆகவே நான் எழுந்து நடந்துக் கொண்டி ருந்தேன். நான் திரும்பியபோது... எனக்கு ஒரு பாரம் ஏற்பட்டது; "நல்லது, ஒருவேளை யாரோ ஒருவர் எங்கோ ஓரிடத்தில் வியாதியாய் இருக்கலாம், மேலும் அவர்களுக்காக நான் ஜெபிக்க வேண்டுமென அவர்கள் விரும்பலாம்." என்று நான் நினைத்தேன். நான் முழங்கால் படியிட்டேன், என்னால் முழுவதுமாக ஜெபிக்க முடியவில்லை. சிறிது நேரம் அப்படியே சென்றது, சிறிது நேரத்திற்கு பிறகு, நான் அறையை இங்கும் அங்கும் பார்த்தேன். உங்களில் இருக்கும் பெண்களில் யாரேனும் எப்பொழுதாவது துவைத்து, துவைத்ததை அப்படியே கொண்டு வந்து ஒரு நாற்காலியின் மேல் போட்டு வைப்பீர்களா? அப்படிதான் என் அம்மா செய்வார்கள். பின்பு வெறுங்காலில் நின்றபடியே இஸ்திரி போடுவார்கள்... நான் அதை கூறினேன் என்று அம்மாவுக்கு தெரிந்தால், அம்மா என்னை மறுபடியும் அதிகமாக திட்டுவார்கள். ஆனால் பரிதாபமான அவர்களை நான் பார்த்திருக்கிறேன், பல நேரங்களில் நின்றபடி, இஸ்திரி பெட்டியுடன் நின்ற வண்ணமாய், உங்களுக்கு தெரியுமா, வெறுங்காலில் நின்றபடியே இஸ்திரி போடுவார்கள். மேலும் அம்மா... 2. அங்கிருக்கும் படுக்கையறையில் அம்மா தன்னுடைய துணிகளை அந்த மூலையிலிருக்கும் நாற்காலியில் வைத்திருக்கிறார்கள் என்று நான் நினைத்தேன். அது ஏதோ வெள்ளையாக தென்பட்டது. அது என்னை நெருங்கி வர ஆரம்பித்தது. நான் அதை பார்த்தேன். அது அந்த நாற்காலியல்ல; அது வெள்ளையாக அசைய கூடிய ஏதோவொன் றாயிருந்தது. மேலும் அது... பார்ப்பதற்கு நானே அதற்குள் சென்றது போன்றிருந்தது, அல்லது அது எனக்குள்ளாக வந்தது போன்றிருந்தது. மேலும் சில நொடிகளில், நான் ஒரு வனாந்தரமான தேசத்தில் நடந்துக்கொண்டிருந்தேன், ஒரு ஆட்டுக்குட்டி கத்துவதை என்னால் கேட்க முடிந்தது, இப்படியாக "பா - பா" என்று. நீங்கள் எப்பொழுதாவது ஒரு சிறிய ஆட்டுக்குட்டி அழுவதை கேட்டிருக்கிறீர்களா? உலகத்திலேயே மிகவும் பரிதாபமான ஒன்று அதுதான். அது கத்திக்கொண்டிருந்தது. நான் கூறினேன், "மிகவும் பரிதாபமான ஆட்டுக்குட்டி என்னால் அதை கண்டுபிடிக்க முடிகிறதா என்று நான் சென்று பார்க்கிறேன்." நான் அந்த அடர்ந்த புதர்களை நோக்கி நடக்க ஆரம்பித்தேன். நான் அதை நெருங்கியபோது, அது ஒரு ஆட்டுக்குட்டியல்ல. அது ஒரு மனிதனாயிருந்தது. அது "மில்டவுன். மில்டவுன்" என்று கூறி அழைத்துக் கொண்டிருந்தது. நல்லது, அந்த இடத்தைப் பற்றி என் ஜீவியத்தில் நான் கேள்விப்பட்டதே இல்லை. நான் என் சுயநினைவிற்கு திரும்பியபோது... அடுத்து வந்த புதன்கிழமை இரவு நான் சபைக்கு சென்றேன். அங்கிருந்த சிலரிடம், "யாருக்காவது மில்டவுன் எங்கே இருக்கிறது என்று தெரியுமா?" என்று கேட்டேன். யாருக்கும் தெரியவில்லை. 3. ஆகவே பின்பு, ஞாயிறு இரவன்று, நான் அதை அறிவித்தேன். "யாருக்காவது மில்டவுன் எங்கேயிருக்கிறது என்று தெரியுமா?" ஜார்ஜ் ரைட் எனும் பேருள்ள சகோதரன் ஒருவர், கூடாரத்திற்கு செல்கிற உங்களில் பலருக்கு அவரை தெரியும் என்று நான் நினைக்கிறேன். அவர் கூறினார், "ஆம், சகோதரன் பிரன்ஹாம், இங்கிருந்து தெற்கு பக்கமாக சுமார் முப்பத்தி ஐந்து மைல் தூரத்தில் இருக்கிறது", "நான் அதற்கு பக்கத்தில் ஜீவிக்கிறேன்" என்றார். நான்கூறினேன், "அடுத்த சனி இரவு நான் அங்கே இருப்பேன்; நான் மில்டவுனிற்கு போக வேண்டுமென்று தேவன் விரும்புகிறார். அங்கு யாரோவொருவர் பிரச்சனையிலிருக்கிறார்" அவர்கூறினார், "அது சுமார் ஐந்நூறு நபர்களை கொண்ட சிறிய நகரம், அல்லது ஆயிரம்பேர் இருப்பார்கள், இங்கிருந்து தெற்கில் இருக்கிறது..." என்றார்... "நல்லது, நான் வருகிறேன்" என்று கூறினேன். 4. நாங்கள் சென்றோம், எனக்கு நினைவிருக்கிறது, தெருமுனை வளையும் இடத்திலிருந்த மளிகை கடைக்கு நான் சென்றேன். நான் சிந்தித்தேன், "என்னிடமிருந்து என்ன வேண்டுமென்று தேவன் விரும்புகிறார் என்று வியந்தேன்?" நான் உள்ளே சென்று ஒரு பெட்டியை வாங்கினேன். வெளியே வந்து இந்த தெருமுனையிலே நின்று பிரசங்கிக்கலாம் என்று நான் நினைத்தேன். நல்லது, என்னால் நான் பெட்டியின் மீது ஏறி நின்றேன், என்னால் பிரசங்கிக்கும்படி எதையும் சிந்திக்க முடியவில்லை. அந்த கிராமத்தில் இருந்த எல்லா மக்களும், உங்களுக்கு தெரியுமா, சனிக்கிழமையில் அங்கே வந்து பொருட்கள் வாங்குவார்கள். சகோதரன் ரைட் கூறினார், "சகோதரன் பிரன்ஹாமே, ஒரு சிறிய வியாபாரத்திற்காக நான் அந்த குன்றின் மீது செல்லப் போகிறேன், அங்கிருக்கும் ஒரு மனிதனுக்கு சில முட்டைகளை எடுத்து செல்ல வேண்டும்." "என்னோடு மேலே சவாரி செய்கிறீர்களா?" என்றார். நான், "சரி" என்றேன். நான் மேலே சென்ற போது, ஒரு பெரிய வெண்மையான சபை அந்த குன்றின் மீது இருந்தது. நான் கூறினேன், " பாருங்கள். அது ஒரு அருமையான சபையல்லவா? என்றேன்" அவர், "ஆம், அந்த சபை பரிதாபத்திற்குரியது." என்றார். "அது ஒரு பாப்டிஸ்டு சபை, அதின் பாஸ்டர் சில பிரச்சனைகளில் அகப்பட்டார்" என்றார். மேலும், "அந்த சபை மூடப்பட்டது, அன்றிலிருந்து அவர்களுக்கு பாஸ்டரே இல்லை" என்றார். "நகரத்தின் அரசு அதை எடுத்துக் கொண்டது. சபை அங்கத்தினர் எல்லாரும் அதை விட்டுவிட்டு மற்ற சபைகளுக்கு சென்று விட்டனர் என்றார். 5. "நில்" என்று தேவனுடைய ஆவி என்னிடம் கூறியதை நான் உணர்ந்தேன். நான் அங்கே சென்றபோது அந்த கதவு பூட்டப் பட்டிருந்தது. "சகோதரன் ரைட் அவர்களே, நீங்கள் போகலாம். நான்... சிறிது நேரம் கழித்து நீங்கள் திரும்பி வந்து என்னை கூட்டிச் செல்லலாம்" என்று கூறினேன். அவர் சென்ற பின்னர், அங்கு நான் முழங்கால்படியிட்டு, நான் ஜெபித்தேன். "கர்த்தாவே, இந்த சபையில் நான் இருக்க வேண்டு மென்று நீர் விரும்பினால், இந்த கதவுகளை எனக்காக திறந்தருளும்" என்றேன். ஆகவே நான் ஜெபித்துக்கொண்டிருந்த வேளையில், நான் எழுந்தேன், யாரோ வருவதை என்னால் கேட்க முடிந்தது, அது ஒரு மனிதன் நடந்து வருவதாயிருந்தது, அவன் "ஹலோ!" என்றான். "எப்படி இருக்கிறீர்கள்" என்று நான் கேட்டேன். அவன் "நீங்கள் ஜெபித்துக் கொண்டிருந்ததை நான் பார்த்தேன்" என்றான். நான் கூறினேன், "ஆம், ஐயா. நான் - நான் சற்றே... நான் ஒரு பிரசங்கியார், நான் சற்றே இந்த படிகளில் ஜெபித்துக் கொண்டி ருந்தேன்" அவன் "நீங்கள் உள்ளே செல்ல வேண்டுமா" என்றான். நான் "ஆம், ஐயா" என்றேன். "என்னிடம் சாவிகள் இருக்கிறது" என்றான். நான் கூறினேன், "கர்த்தாவே, உமக்கு நன்றி". "கர்த்தாவே, உமக்கு நன்றி" என்று நான் கூறினேன். நீங்கள் எல்லாரும் அதை விசுவாசிக்கிறீர்களா? ஆம், ஐயா. ஆம், ஐயா. அவர் உண்மையானவர். 6. அவன் எனக்காக கதவை திறந்தான், நான் உள்ளே சென்றேன், முந்நூறு அல்லது நானூறு பேருக்கான இருக்கைகள் இருந்தது. அந்த இடம் வரைக்கும் நான் நடந்து சென்று, என்னுடைய தலையை தாழ்த்தி ஜெபித்தேன். "இதனுடைய உரிமையாளர் யார்?' என்று கேட்டேன். 'ஒ. நகரத்தின் அரசாங்கம்" என்றான். "நாங்கள் வெறும்... இதை நான் பராமரிக்கிறேன்" என்றான். "சவ அடக்கங்களும் மற்றும் அது போன்றவைகள் மட்டுமே இங்கு நடக்கும்" என்றான். நான், "இங்கே ஒரு எழுப்புதல் கூட்டத்தை நடத்தலாமா என்று நான் ஆவல் கொள்கிறேன்?' என்றேன். "நகரத்தின் அதிகாரியை பாருங்கள்" என்றான். நான் கீழே சென்று அவரை கேட்டேன். அவர் கூறினார், "நிச்சயமாக, நீங்கள் அளவு கருவியை (meter - மின்சாராம் அளக்கும் கருவி - ஆசி] அங்கே பொருத்திக்கொண்டால்" என்றார். நான் கூறினேன், "நல்லது, நான் பயன்பாட்டுச் சாதனங்களின் நிறுவனத்தில் வேலை செய்கிறேன், நான் என்னுடைய சொந்த அளவு கருவியை அங்கு பொருத்திக்கொள்கிறேன்" அவர் "எல்லாம் சரி" என்றார். நான் அளவு கருவியை அங்கு பொருத்தி, நான் அங்கு எழுப்புதல் கூட்டம் நடத்தப்போவதாக சுற்றியிருக்கும் இடங்களில் அறிவித்தேன். நான் கூப்பிட்ட அந்த முதல் மனிதனை என்னால் ஒருபோதும் மறக்கவே முடியாது. "எழுப்புதல் கூட்டம் நடக்க போகிறது, ஐயா, நீங்கள் வருவீர்களா?" என்று கேட்டேன். அவன் "இங்கே நாங்கள் கோழிகள் வளர்க்கிறோம். சபைக்கு வருவதற்கெல்லாம் எனக்கு நேரமில்லை" என்றான். "நல்லது, கோழிகளை சிறிது நேரம் தனியே விட்டுவிட்டு கூட்டத்திற்கு உங்களால் வர முடியாதா?" என்று கேட்டேன். 7. அவன் கூறினான், "ஒ, அதுபோன்று வருவதற்கெல்லாம் எங்களுக்கு நேரமே இல்லை". "நான் என் வேலையை பார்க்கிறேன்". "நீ உன்னுடைய வேலையை பார்" என்றான். நான், "ஐயா, உங்களுடைய உணர்வை நான் புண்படுத்த நினைக்கவில்லை" என்றேன். அன்றிலிருந்து சரியாக பத்து நாளில், உங்களுக்கு தெரியுமா, அந்த மனிதனை புதைக்க அவர்கள் நேரம் ஒதுக்க வேண்டியிருந்தது. அவன் மரித்தான். அவர்கள் அவனை சரியாக சபைக்கு நேராக புதைத்தார்கள். நாங்கள் ஒரு எழுப்புதல் கூட்டத்தை ஆரம்பித்தோம். மேலும்.... ஒ, நான் வெளியே சென்று காடுகளில் ஜெபித்தேன், நான் எண்ணினேன் கர்த்தர் எனக்கு ஒரு மகத்தான செய்தியை கொடுத்தார் என்று, எனவே அதை பிரசங்கிப்பதற்காக என்னுடைய இருதயத்தில் நான் எரிந்து கொண்டிருந்தேன். 'ஒ, இன்றிரவு அங்கே ஒரு பெரிய கூட்டமிருக்கும். ஒருவேளை நான் ஒரு எழுப்புதல் கூட்டத்தை நடத்த வேண்டுமென்று கர்த்தர் விரும்புகிறார்" என்று கூறினேன். 8. ஆகவே நான் அங்கு சென்றேன். அங்கு யார் இருந்தது என்று உங்களுக்கு தெரியுமா? ஜார்ஜ் ரைட் அவருடைய மனைவி, மற்றும் மகன் மற்றும் மகள். எனக்கு சபையில் நான்கு பேர் இருந்தார்கள். கர்த்தர் எனக்கு கொடுத்த அந்த செய்தியை அவர் கொடுத்தவாரே நான் பிரசங்கித்தேன். பின்பு அடுத்த இரவில், பார்ப்பதற்கு விசித்திரமான ஒரு மனிதன் அங்கு வெளியே நடந்து வந்தான். அவன் ஒரு.. அவன் ஒரு பின்வாங்கிபோன நசரேன் (Nazarene - ஸ்தாபன சபை - ஆசி], முன்பு ஒரு நசரேன் சபையை சேர்ந்தவனென்றும் பின்வாங்கிப் போனவன் என்றும் அவர்கள் என்னிடம் கூறினார்கள். அவன் தன்னுடைய சோள புகைபிடிக்கும் [சோளத்தினால் புகை பிடிப்பதற்கென்று செய்யப்பட்ட குழாய் - ஆசி] குழாயை அவன் வாயில் வைத்திருந்தான், அவன் அதை கட்டிடத்தின் பக்கச்சுவரில் தட்டினான், தலைமுடி அவன் முகத்தின் மீது கீழே தொங்கிக்கொண்டிருந்தது, பல் வெளியே நீட்டியிருந்தது. உள்ளே பார்த்து, "இங்கிருப்பதாக அவர்கள் பேசிக்கொண்டிருக்கும் அந்த சிறிய பில்லி சண்டே எங்கே" என்று அப்படியாக கேட்டான். திரு. ரைட் பின்னாக சென்று அவனை அழைத்து வந்து அவனை உட்கார வைத்தார். நான் அங்கே மேலே பிரசங்க பீடத்திற்கு பின்னாக நின்று வேதாகமம் வாசித்துக் கொண்டிருந்தேன். சகோதரன் ரைட் மேலே வந்து, கூறினார், "இந்த கிராமத்திலேயே மிகவும் முரடனான மனிதன் இப்பொழுது உள்ளே வந்திருக்கிறான்". "ஒ, அவன் ஒரு துணிச்சலானவன்" என்றார். "அவனுடைய பெயர் வில்லியம் ஹால். அவன் இங்கே குன்றின்மீது பூக்கடை நடத்திக்கொண்டிருக்கிறான்" என்றார். "ஒருவேளை அவனைத்தான் கர்த்தர் தேடுகிறார்" என்று நான் கூறினேன். எனவே நான் பிரசங்கிக்க ஆரம்பித்தேன். சகோதரன் ரைட் அவனிடம் பின்னால் சென்று, "நீ முன்னே வர விரும்புகிறாயா?" என்றார். "இங்கே பின்னால் இருக்கும் காரியங்களை நான் பார்த்துக் கொள்கிறேன். நீ முன்னாடி போ" என்று கூறினான். கூட்டம் தொடங்கி, நடந்து முடிந்த பிறகு, திரு ஹால் பிரசங்க பீடத்திற்கு முன்பாக இருக்கும் தடுப்பானில் (rail - Altar rail - Ed] மண்டியிட்டு தேவனிடம் ஜெபித்துக்கொண்டிருந்தார். இன்று அவர் தான் அங்கிருக்கும் என்னுடைய துணை பாஸ்டர். மேலும் இன்னமுமாக... சில இரவுகளில் சில சுகமளித்தல் அங்கே நடை பெற்றது. அப்பொழுது அது ஜனக்கூட்டத்தை வரவழைத்தது. நாங்கள் ஒலி பெருக்கிகளை அங்கே மரங்களில் தொங்கவிட வேண்டியிருந்தது. ஆனால் அது பார்பதற்கு. இன்னமுமாக, முழுவதும் முடியாதது போன்றிருந்தது. 9. ஆகவே அங்கே ஒரு குறிப்பிட்ட சபையை சேர்ந்த ஒரு இளம் சீமாட்டி இருந்தாள், அதாவது நான் எந்த பெயரையும் கூறப் போவதில்லை; அவர்கள் எந்தவிதமான ஆவியையும் விசுவாசிப்பதில்லை; எழுத்து மட்டுமே, "வார்த்தை எங்கே பேசுகிறதோ அங்கே நாங்களும் பேசுவோம், அது அமைதியாயிருக்கும்போது நாங்களும் அமைதியாயிருப்போம்" (இது அந்த குறிப்பிட்ட ஸ்தாபனத்தின் கொள்கை - ஆசி] அவர்கள் ஒரு பொது அறிவிப்பை வெளியிட்டிருந்தனர், அதாவது யாரேனும் அந்த கூட்டத்திற்கு சென்றால் அவர்களுடைய சபை அங்கத்தினன் அட்டை அவர்களிடமே திரும்ப அளிக்கப்பட்டு வீட்டிற்கு அனுப்பப்படுவார்கள். அவளுடைய தகப்பனார் அந்த சபையின் டீக்கனாயிருந்தார். ஆகவே அவளிடம் என்னுடைய ஒரு சிறிய புஸ்தகம் கிடைத்தது. இந்த சீமாட்டி, பெண், இப்பொழுது அவளுக்கு சுமார் இருபத்தி ஐந்து வயது. அவளுடைய பெயர் Miss ஜார்ஜியா கார்ட்டர். அவள் ஒன்பது வருடங்கள், எட்டு மாதங்களாக படுத்தே இருந்தால், அதாவது படுக்கையிலிருந்து ஒருபோதும் அவள் தன் தலையை தூக்கியதே இல்லை: காச நோய். அவர்களால் அவளுக்கு கழிகலத்தைக்கூட (bedpan) வைக்க முடியவில்லை. அவர்கள் ஒரு ரப்பர் பாயை போட்டு, ஒரு இழுக்கும் பாயை போட்டிருந்தனர். உங்களுக்கு தெரியும் என்று நான் நினைக்கிறேன், சகோதரன் ரயான், அந்த இழுக்கும் பாயை அப்படியாக இழுக்கவேண்டும். அவள் ஒரு போதும் வெளி உலகத்தை கண்டதே இல்லை, வெளியிலிருக்கும் ஒரு இடத்தைக்கூட, ஜன்னலை கூட, ஒன்பது வருடம் மற்றும் எட்டு மாதங்களாக. யாரோவொருவர் வந்து என்னிடம் கூறினார், ஆனால் "நீங்கள் சென்று அவளுக்காக ஜெபிக்க முடியாதா" என்றார். "அவள் உங்களுக்காக அழுதுகொண்டிருக்கிறாள்" என்றார். அவர்கள் அதை கூறியவுடனே, அந்த ஒருவளைத்தான் நான் போய் சந்திக்க வேண்டும் போன்றிருந்தது. 10. நல்லது, அவளின் தாயும் தகப்பனும் நான் வரும்படி அனுமதிக்கமாட்டார்கள். "இல்லை, அந்த வஞ்சகன் வருவதை நாங்கள் அனுமதிக்கமாட்டோம்" என்றார்கள். பின்பு நான் எழுப்புதல் கூட்டத்திலிருந்து கிளம்ப ஆயத்தமானபோது, அவளின் தந்தை கூறினார், "நல்லது, அவர் வீட்டைவிட்டு போவதாக" மேலும் அவளின் தாயாரும் அந்த பெண்பிள்ளையின் மன நிம்மதிக்காக அவளும் அவளும் வெளியேபோவதாக கூறினாள். எனவே நான் அங்கே செல்வதற்கு அவர்கள் தங்கள் பிரசங்கியாரிடம் கண்டிப்பாக அனுமதி வாங்கியிருக்கிறார்கள் என்று நான் நினைத்தேன். ஆகவே அவளை சந்திக்க நான் உள்ளே சென்றேன். அந்த பரிதாபமான சிறிய பிள்ளை என்னுடைய சிறிய புஸ்தகத்தை வைத்திருந்தாள். படுக்கையின் பின்பக்கத்தில், அவளால் செய்ய முடிவதற்கு முன்பு... அவளுடைய கரங்களை பின்னாக குறிப்பிட்ட தூரம் வரை அசைத்து, அவள் உறுதியாக, மற்றும் அழுது, விடுதலைக்காக ஜெபித்துக் கொண்டிருந்தாள் அந்த படுக்கையின் எல்லா சாயமும் அழிந்திருந்தது. ஆனால் அவளின் சபை தெய்வீக சுகமளித்தலை விசுவாசிக்கவில்லை. மேலும் அவளுக்கு இந்த புஸ்தகம் கிடைத்திருந்தது, தரிசனத்தில் பார்த்து அனுப்பப்பட்டு இன்னொரு பெண்பிள்ளை (இந்தியானாவை சேர்ந்த சகோதரி நெயில் (Nail), சப்பாணியாய் இருந்து சுகம் பெற்றார்கள் - ஆசி - 50-0816, Para 28] சுகமானதை அவள் செய்தித்தாளில் பார்த்திருந்தாள். மேலும் அவளும் சுகம் பெற விரும்பினாள். 11. எனவே, ஒ, சிறிய பெண் மிகவும் அழுதிருந்தாள். நான் உள்ளே சென்றபோது; அவள் "சகோதரன் பிரன்ஹாமே, நீங்கள் வந்தால், நான் சுகம்பெரும்படி இயேசு செய்வார் என்று இப்பொழுதுதான் விசுவாசித்தேன், " "சகோதரியே, அவரை நீ சேவிப்பாயா?" என்று கேட்டேன். "என் முழு இருதயத்தோடும்" என்றாள். மேலும் அவளுடைய சிறிய பெலவீனமான கைகளால், அவளால் தன் சளியிருக்கும் பாத்திரத்தைக் கூட தூக்க முடியவில்லை. அவள் தூக்க முயற்சிப்பாள், ஆனால் அவள், "அ,அ,அ" என்பாள், பின்பு அவர்கள் அந்த பாத்திரத்தை பிடித்துக்கொள்வார்கள். அவள் "அ, அ, அ" என்று அதில் துப்புவாள். அந்த நிலையில்தான் அவள் இருந்தாள். நான் முழங்கால் படியிட்டு அவளுக்காக ஜெபித்து அறையை விட்டு வெளியே சென்றேன். 12. சரியாக அன்றிலிருந்து இரண்டு வாரம் கழித்து, இன்னொரு கூட்டத்தை ஆரம்பிக்க நான் மறுபடியும் வந்தேன். எங்களுக்கு மூன்று, நான்கு இரவு கூட்டங்கள் இருந்தது. அங்கே இன்னொரு ஊழியக்காரர் இருந்தார், அவருக்கு முழுக்குவதில் [முழுக்கு ஞானஸ்நானம் -ஆசி] விசுவாசம் இல்லை. அங்கே ஆற்றில் ஒரு கூட்டத்திற்கு நான் ஞானஸ்நானம் கொடுக்க இருந்தேன். அவர் ஒரு கூடாரத்தில் எழுப்புதல் கூட்டம் நடத்திக்கொண்டிருந்தார். அவர் கூறினார், "என்னுடைய சபை கூட்டத்திலிருந்து யாரேனும், அந்த பைத்தியக்கார தெய்வீக சுகமளிப்பவன் இருக்கும் அந்த சபையில் நடந்து சென்றால் கூட", "நான் செய்வேன்.. சபையிலிருந்து அவர்களை முற்றிலுமாக நீக்கிவிடுவேன்." என்றார். அவர் கூறினார், "யோசனை என்னவென்றால்..." "உங்களுக்கு தெரியுமா, அந்த மனிதன் உங்களை தண்ணீரில் மூழ்கடித்து விடுவான்." என்றார். அவர் கூறினார், "நல்லது... அந்த பிற்பகலில் ஞானஸ்நான ஆராதனைக்காக நான் அங்கு சென்றிருந்தேன். மேலும் சிறிய ஜார்ஜியா, அவளிடம் நான் கூறினேன், "இப்பொழுது, இப்பொழுது, சகோதரியே, உனக்காக என்னால் ஜெபிக்க முடியும். எனக்கு தெரிந்தது அவ்வளவுதான்" என்று கூறினேன். "நல்லது, அந்த நெயில் பெண்ணிற்கு செய்தது போன்று எனக்கும் உங்களால் செய்யமுடியுமா?" என்று கேட்டாள். "இல்லை, அது ஒரு தரிசனமாயிருந்தது, தேனே. முதலில் நான் தரிசனத்தை பார்க்கவேண்டும்" என்று கூறினேன். "அவர் என்னை மறுபடியும் அனுப்பினால், நான் திரும்ப வருவேன். ஆனால் நீ சுகமாகிவிடுவாய் என்று நான் விசுவாசிக்கிறேன்", என்று கூறினேன். அவளுடைய விசுவாசத்தை உற்சாகப் படுத்தினேன். 13. எனவே, ஆராதனையின் கடைசி நாளில் ஞானஸ்நானம் கொடுக்க டோட்டன் போர்டிற்கு (Totten Ford) நான் சென்றிருந்தேன். காரிடான் (corydon) அருகில் இருக்கும் உங்களில் பலர் அந்த இடம் எங்கிருக்கிறது என்பதை அறிவீர்கள். ஆகவே ஞானஸ்நானம் கொடுக்க நான் அங்கே சென்றிருந்தேன். மேலும் இந்த ஊழியக்காரரும் அவருடைய ஆராதனையை முடித்துவிட்டு, அந்த எல்லா சபை ஜனங்களும் கரையிலே நின்றிருந்தனர். நான் அந்த நதியிலே நடந்து சென்றேன், உங்களுக்கு தெரியுமா. ஒ, என்னே, அந்த மகிமையான உணர்வு, அந்த தண்ணீர், எல்லா இடங்களிலும் சுற்றிலும் தெரித்துக்கொண்டிருந்தது. அந்த பிற்பகலில் சுமார் ஐம்பது பேருக்கு ஞானஸ்நானம் கொடுத்தேன். மேலும் நான் அங்கே நின்றிருந்தபோது, அந்த மரத்தின் ஒவ்வொரு கிளையிலும் தூதர்கள் அமர்ந்திருப்பது போன்றிருந்தது. 14. நான் அங்கே நின்றபடியே, இப்படியாக ஜெபிக்க ஆரம்பித்தேன். நான் கூறினேன், "தேவன் யோவானை ஞானஸ்நானம் கொடுக்க அனுப்பினது போன்று..." மேலும் நான் கூறினேன், அவர் கூறினார், "நீங்கள் உலகமெங்கும் போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுங்கள். விசுவாசிக்கிறவர்களை இந்த அடையாளங்கள் தொடரும்". சரியாக அந்நேரத்தில், பரிசுத்த ஆவியானவர் அந்த கரை முழுவதுமாக இறங்கினார் அந்த ஊழியக்காரரின் முழு சபையாரும் நதியில் நடந்து வந்தார்கள், தங்களுடைய நல்ல உடைகளோடு ஆர்ப்பரித்தபடியே. அவர்களில் ஒவ்வொருவருக்கும் அந்த பிற்பகலில் நான் ஞானஸ்நானம் கொடுத்தேன். அதாவது அவர்களில் ஒவ்வொருவருக்குமே என்று கூறுகிறேன். அது சரி. அது உண்மை. பெண்கள் தங்கள் பட்டு உடைகளுடன் ஆர்ப்பரித்தார்கள், இளம் சீமாட்டிகள், மேலும் தாய்மார்களும், தந்தைமார்களும், தங்களுடைய பிள்ளைகளையும், மற்றவர்களையும் அழைத்து வந்தனர். ஏறக்குறைய இரவு ஆகும் வரை நான் ஞானஸ்நானம் கொடுத்தேன். அவர்கள் என்னை தண்ணீரிலிருந்து இழுக்க வேண்டியிருந்தது. ஏனெனில் அன்று இரவு நான் ஒரு பாப்டிஸ்டு சபையில் கூட்டம் நடத்தவேண்டும். நான் சகோதரன் ரைட்வுடனும் மற்றும் மற்றவர்களோடும் இரவு உணவிற்காக சென்றேன். ரைட் அவர்களின் மனைவி, அவர்கள் உண்மையான ஒரு சமையல்காரி. கிராமத்திற்குள்ளே வெகு தூரத்தில் அவர்கள் வசிக்கிறார்கள். "எனக்கு இரவு உணவு இப்பொழுது வேண்டாம்" என்று நான் கூறினேன். "ஜெபிப்பதற்காக நான் இங்கே செல்கிறேன். நான் ஜெபிக்க வேண்டுமென்று கர்த்தர் விரும்புகிறார். என் இருதயத்தில் ஏதோவொன்று பாரமாக சாய்ந்துக் கொண்டிருக்கிறது." என்று கூறினேன். ஆகவே அப்பொழுது, "சகோதரன் பிரன்ஹாமே, நல்லது, நான் உணவு மணியை அடித்தவுடன் நீங்கள் வாருங்கள்," என்று கூறினார். "ஏனெனில் நாம் துரிதமாக செல்ல வேண்டும்" என்றார். "எல்லாம் சரி" என்றேன். 15. நான் அங்கு சென்று, முழங்கால் படியிட்டேன். உங்களுக்கு தெரியுமா, அந்த முட்கள் உங்களை குத்தி, தரையானது மிகவும் கடினமாயிருப்பதை போன்று நீங்கள் எப்பொழுதாவது உணர்ந்த துண்டா? உங்களுக்கு எப்பொழுதாவது அப்படி இருந்திருக்கிறதா? அதுதான் நீங்கள் தொடர்ந்து முன்னேற வேண்டிய நேரமாயிருக்கிறது. அது பிசாசு உங்களை அதை செய்யாமல் இருக்கவைக்க முயற்சிக்கிறான். முன்னேறி சென்று கொண்டே இருங்கள். நீங்கள் சரியானதை செய்துகொண்டிருக்கும் வரை, உங்களால் தவறானதை செய்ய முடியாது. புரிகிறதா? நீங்கள் இந்த பாதையில் போகும்போது, உங்களால் இந்த பாதையிலும் போகமுடியாது. ஜெபிப்பது சரியானது என்பதை நான் அறிந்திருக்கிறேன். மேலும் நான் தொடர்ந்து ஜெபித்துக்கொண்டே இருந்தேன்; அந்த - அந்த காற்று அடித்து, ஒரு முள் என் முகத்தில் அடித்தது. நான், "கர்த்தாவே, உமக்கு நன்றி" என்று கூறி தொடர்ந்து ஜெபித்தேன். சிறிது நேரம் கழித்து, நான் ஆவியில் தொலைந்துபோனேன். நீங்கள் எப்பொழுதாவது ஆவியில் தொலைந்திருக்கிறீர்களா? எரிகிற முட்செடி போன்று வேகமாக பேசுவதற்காக என்னை மன்னிக்கவும், ஆனால் நான் துரிதப்படுத்த முயற்சிக்கிறேன். ஆனால் நான் சற்றே ஆவியில் தொலைந்துப்போயிருந்தேன். நான் எங்கே இருந்தேன் என்பதே எனக்கு சரியாக தெரியவில்லை. அந்த மணி அடித்ததை நான் கேட்டேன், ஆனால் இரவு உணவை சிந்திப்பதை காட்டிலும் எனக்கு தேவனோடு ஒரு மிக அருமையான நேரம் உண்டாயிருந்தது. அந்த மணி தொடர்ந்து அடித்துக் கொண்டே இருந்தது. அது இருட்டாக ஆரம்பித்து விட்டது என்பதை நான் அறிவேன். நான் தொடர்ந்து ஜெபித்துக்கொண்டே இருந்தேன். நான் கூறினேன், "கர்த்தாவே, உம்முடைய எல்லா நன்மைகளுக்காகவும், உமக்கு நன்றி". 16. அப்பொழுது அது ஒருவிதத்தில் சற்று அமைதியானது. பின்பு நான் எழுந்து அங்கு போகலாம் என்று நான் நினைத்தேன். ஒருவேளை முதல் பந்தி முடிந்திருக்கும். மேலும் நான் கூறினேன், "கர்த்தாவே, உமக்கு நன்றி". என் கண்களை நான் திறந்தபோது, டாக்வுட் (dogwood) முட்செடியினூடாக ஒரு வெளிச்சம் பிரகாசித்துக்கொண்டிருந்தது, ஒருவிதமான மரகத பச்சையும், மஞ்சள் நிறமுமான வெளிச்சம், என்மீது பிராகாசித்துக்கொண்டிருந்தது. மேலும் அந்த காட்டு பகுதியினுள், ஒரு மகத்தான மெல்லிய ஆனால் அதிகாரமுடைய சத்தம் போன்ற ஒரு சத்தம் பேசியது, "கார்ட்டரின் பாதையாக போ" என்று கூறியது. அதுவே போதுமானது. அதுவே இறுதியானது. நான் மேலே எகிறி குதித்து ஆர்ப்பரிக்க ஆரம்பித்தேன், நான் ஓடினேன். என்னை தேடுவதற்காக அவர்கள் தேடும் குழுக்களை காட்டினுள் கொண்டிருந்தனர். நான் வேலியை தாண்டி வயல் நிலத்தில் குதித்தேன், மேலும் சகோதரன் ரைட் அவர்களின் கரங்களை அணைத்துக்கொண்டேன். அவர் கூறினார், "சகோதரன் பில்லி" அவர் கூறினார், "இரவு உணவிற்கு நீங்கள் வரவேண்டுமென ஒரு மணி நேரமாக என் மனைவி காத்துக்கொண்டிருக்கிறாள்." அவர் கூறினார், "அவர்கள் குன்றின் மேல் எல்லாவிடங்களிலும் இருந்து, உங்களை தேடிக் கொண்டிருக்கின்றனர்". 17. நான் கூறினேன், "நல்லது, சகோதரன் ரைட், நான் இரவு உணவு சாப்பிட போவதில்லை". "இன்னும் சில நிமிடங்களில் ஜார்ஜியா கார்ட்டர் முழுவதுமாக சுகமாக போகிறாள்" என்று நான் கூறினேன். அவள் அங்கிருந்து எட்டு மைல் தூரத்திலிருந்தாள். அவர், "என்ன?" என்றார். நான் "ஆம், ஐயா. கர்த்தர் உரைக்கிறதாவது" என்றேன். அவர் "அவள் எழுந்திருக்கப்போகிறாள் என்று நீங்கள் கூறுகிறீர்களா?" என்றார். நான், "என்னால் சீக்கிரமாக அங்கு செல்ல முடிந்தால், அடுத்த சில நிமிடங்களில் அவள் இயல்பு நிலைக்கு திரும்பி சுகமாவாள்" என்றேன். அவர், "நானும் உங்களுடன் வரலாமா?" என்றார். நான், "நிச்சயமாக, ஐயா" என்றேன். மேலும் டெக்சாசிலிருந்து வந்திருந்த ஒரு மனிதன் அங்கிருந்தான், அவனுடைய மனைவியை அப்பொழுதுதான் அழைத்து வந்து, அவள் சுகம் பெற்றிருந்தாள். அவன், "சகோதரன் பிரான்ஹாமே, நானும் உங்களுடன் வரலாமா?" என்றான். அன்றிலிருந்து சில வாரங்களுக்கு முன்னர், நெயில் எனும் பெண் சுகமானதை அவன் கண்டிருந்தான். நான், "நிச்சயமாக, ஐயா" என்றேன். அவன், "நீங்கள் கூறுகிறீர்களா அந்த சிறிய எலும்பு குவியல்கள் அதாவது... " என்றான். நான், "இன்னும் சில நிமிடங்களில் அவள் சுகமாக போகிறாள்" என்றேன். நாங்கள் காரில் ஏறி சென்றோம். இப்பொழுது, கோட்டின் இரண்டு முனைகளிலும் தேவன் கிரியை செய்கிறார். நீங்கள் அதை விசுவாசிக்கவில்லையா? [சபையார் "ஆமென்" என்கிறார்கள் ஆசி.] 18. யோவான் மாற்குவின் (John Mark's) வீட்டில் அவர்களுக்கு ஜெப கூட்டம் இருந்தபோது, பேதுரு சிறையிலிருந்தான், கர்த்தருடைய தூதனானவர் அங்கே இருந்தார். நான் கூறுவது உங்களுக்கு புரிகிறதா. பின்பு இந்த பெண், அந்த தாயார், திருமதி. கார்ட்டர்... உங்களுக்கு வேண்டுமானால் நீங்கள் எல்லாரும் அவளுக்கு கடிதம் எழுதவேண்டுமென்று நான் விரும்புகிறேன். அவள் மிகவும் ஆபத்தான நிலையிலிருந்தாள். ஆனால் அவள்... அந்த சிறிய ஜார்ஜியா அழுதாள். அந்த பிற்பகலில் அவளுக்கு சுகம் கிடைத்தால், அவள் வந்து ஞானஸ்நானம் எடுத்துக்கொள்வதாக தேவனுக்கு அவள் வாக்கு அளித்திருந்தாள். எனவே... அவள் அந்த படுக்கையை விட்டு எழுந்ததே இல்லை, இப்பொழுது, தன் தலையை ஒன்பது வருடம் மற்றும் எட்டு மாதங்களாக தூக்கியதே இல்லை. அப்பொழுது, அவள் அங்கே படுத்து அழுதுகொண்டிருந்தாள், மேலும் அவளின் தாயார் மிகவும் கவலையுற்றிருந்தாள். அவளின் தாயார் அங்கே அமர்ந்திருந்தாள், ஒரு அழகிய இளம் பெண், நரைத்த தலையுடன், பக்கவாதத்தால் பாதிக்கபட்டிருந்தாள். எல்லா நேரங்களிலும் அந்த படுக்கைக்கு அருகில் அமர்ந்திருந்தாள், இரவு பகலாக, அவளால் கொஞ்ச நேரம் மட்டுமே தூங்க முடியும். எல்லாம் சரி. அவளின் தாயார் சமையலறைக்குள் சென்று; அவள் முழங்கால் படியிட்டு, அவள் "ஒ அன்பான தேவனே..." என்றாள். தவறாக போதிக்கபட்டிருந்தாள், உத்தமமாக இப்பொழுது. ஒ அன்பான தேவனே," என்றாள். "அங்கிருக்கும் என்னுடைய பரிதாபமான சிறிய பெண்பிள்ளை மீது இரக்கமாயிரும், பரிதாபமான அவள் அங்கே படுத்திருக்கிறாள், மரணத்திற்கு இன்னும் கொஞ்ச நாட்களே இருக்கிறது. அவள் அங்கே படுத்திருக்கிறாள். மேலும் அந்த வஞ்சகன் ஏதோவொன்றை கூறிக்கொண்டு இந்த கிராமத்திற்குள் வந்திருக்கிறான்." "அவன் என் பிள்ளையை முழுவதும் உடைந்து போக வைத்துவிட்டான்" என்றாள். "தேவனே, இரக்கமாயிரும்" என்றாள். அவ்விதமாக ஜெபிக்க ஆரம்பித்தாள். 19. இப்பொழுது, இதோ அவளுடைய சாட்சி. எனக்கு இது தெரியாது; இது அவளுடைய வார்த்தைகள். அவள் கூறினாள், "அவள் அப்படியாக தன் தலையை உயர்த்தியபோது; அவள் தன் கண்களில் இருந்து வரும் கண்ணீரை துடைத்துக் கொண்டிருந்தாள். அவளுடைய மகள் பக்கத்து வீட்டில் வசித்தாள். அவர்கள் நல்ல ஜனங்கள். மேலும் சூரியன் மேற்கே மறைந்துக் கொண்டிருக்கையில், இவ்விதமாக சுவரின் மீது அது பிரகாசித்தது"அவள் கூறினாள், "ஒரு நிழல் சுவரின் மீது வருவதை அவள் பார்த்தாள்". அது தன்னுடைய மகள் வீட்டின் அருகில் வருகிறாள் என்று நினைத்தாளாம். ஆனால் அவர் அவளின் அருகில் வந்தபோது, அவள் கூறினாள், "அது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவாயிருந்தது". "அவர் அப்படியாக இன்னும் அருகில் வந்தபோது, அவர், 'இது யார்?''' என்றார். மேலும் கூறினாள், அவர்கள் பார்த்தார்கள். அவள் என்னை இந்த பெரிய நெத்தியுடன், இந்த வேதாகமத்தை என் இருதயத்தோடு அணைத்தபடி வருவதை, வீட்டிற்குள் நடந்து வருவதை பார்த்தாளாம். மேலும் அவள் கூறினாள், "ஒ. இரக்கம், நான் - நான் - நான் சென்றேன்... நான் தூங்கிவிட்டேன்." அவள் ஒரு போதும் தரிசனம் கண்டதே இல்லை. "நான் - நான் தூங்கி விட்டேன்" என்று அவள் கூறினாள். அவள் உள்ளே ஓடி சென்று ஜார்ஜியாவிடம், "ஜார்ஜியா, சில நிமிடங்களுக்கு முன்பு நான் அங்கே ஜெபித்துக் கொண்டிருந்த போது, சுவற்றின் மேல் ஒரு வடிவத்தை நான் பார்த்தது போன்றிருந்தது, பார்பதற்கு இயேசுவை போல் இருந்தது. மேலும் அது சகோதரன் பிரன்ஹாம் வருவதாயிருந்தது," என்றாள். "இரண்டு மனிதர்கள் அவரை தொடர்ந்து வந்தார்கள். அவர் வேதாகமத்தை தன் இருதயத்தின் மீது வைத்திருந்தார்" என்றாள். மேலும் சரியாக அந்த நேரத்தில் என் கதவு வெளியே சாத்தப்பட்டு, நானும் அந்த இரண்டு மனிதர்களும் வந்தோம். 20. நான் உன்னிடம் கூறுகிறேன். ஒ, என்னே, நான் நன்றாக உணருகிறேன். சகோதரனே, நீ எங்கே நிற்கிறாய் என்பதை நீ அறியும்வரை அந்த உணர்வு எப்படி இருக்கும் என்று உன்னால் ஒருபோதும் உணர முடியாது. அப்பொழுது நரகத்திலுள்ள ஒட்டு மொத்த பிசாசுகளாலும் அதை நிறுத்த முடியாது; எதினாலும் அதை நிறுத்த முடியாது. நீ எங்கே இருகிறாய் என்பதை அப்பொழுது நீ அறிந்திருக்கிறாய். வீட்டின் முன் புறத்திற்கு சென்றோம். நான் ஒருபோதும் என்னுடைய சரீரத்திலிருந்து நான் வெளியே வந்தது போன்றும், என் சரீரம் அந்த கதவை திறந்து உள்ளே செல்வதை பார்த்தது போன்றும் நான் உணர்ந்தேன். அந்த சிறிய பெண் அங்கே படுத்திருந்தாள். அந்த தாயார் அப்படியே சுருண்டு மயங்கி கீழே விழுந்தாள். அவள் படுத்திருந்த அந்த மெத்தையிடம் நான் நடந்து சென்றேன். நான் கூறினேன், "சகோதரி ஜார்ஜியாவே, இந்த எல்லா நேரங்களிலும் நீ நேசித்து நம்பியிருந்த கர்த்தராகிய இயேசுவும் என்னை காட்டில் சந்தித்து, நீ சுகமாகும்படி நான் வரவேண்டும் என்று கூறினார். ஆகவே, சிறிது நேரத்திற்கு முன்பு காட்டில் எனக்கு அளிக்கப்பட்ட கட்டளைக்கு கீழ்படிந்தவனாய், உன்னை என் கரத்தால் பிடித்து கூறுகிறேன், "கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் காலூன்றி எழுந்து நின்று சுகத்தை பெற்றுகொள்'', 21. அந்த பரிதாபமான சிறிய பெண்ணின் எடை முப்பத்தி ஆறு அல்லது முப்பத்தி ஏழு பவுண்டுகளுக்கு அதிகமாக இல்லை (சுமார் 16 - கிலோ - ஆசி], வெறுமனே ஒன்றிணைந்து இருக்கும் எலும்புகள் மட்டுமே இருந்தது... ஏன், அவள் நிற்க வேண்டும் என்று நினைத்தால் கூட அவளால் நிற்க முடியாது. எழுந்து மட்டும் நிற்கவில்லை, ஆனால் அவள் குதித்தெழுந்து, அவளுடைய உச்சகட்ட குரலில் கத்தி கூச்சலிட்டாள். அங்கிருந்த ஜனங்களும் கத்தி கூச்சலிட ஆரம்பித்தனர். முற்றிலும் சாதரணமாகவும் நன்றாகவும் இருந்தாள். அவளின் தாய் மயங்கினாள். அவளுடைய சகோதரியும் உள்ளே ஓடி வந்தாள். அவளுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அவளும் கத்தி கூச்சலிட ஆரம்பித்தாள், அவளுடைய முடி... அவளுடைய முடியை அப்படியாக இழுத்து பிடித்து, சாலையில் ஓடினாள், 'ஏனெனில் ஏதோ வொன்று நடந்ததிருக்கிறது. அவளின் தந்தை அவருடைய கொட்டகையிலிருந்து சிறிது பாலை, இது போன்ற ஒரு - ஒரு பாத்திரத்தில் கொண்டு வந்து கொண்டிருந்தார். பியானோ வாசிக்கும் சத்தத்தை அவர் கேட்டு, அது என்னவென்பதை கண்டறிய வீட்டிற்குள் ஓடி வந்தார். ஒன்பது வருடங்கள் மற்றும் எட்டு மாதங்களாக அந்த மெத்தையில் இருந்து ஒருபோதும் நகராமல் இருந்த அவருடைய மகள் அந்த பியானோவிடம் அமர்ந்து, "இயேசுவே, என்னை சிலுவையின் அருகில் வைத்துக்கொள்ளும். அங்கே ஒரு விலையேற பெற்ற ஊற்றுண்டு, அனைவருக்கும் இலவசம், அது கல்வாரியின் ஊற்றிலிருந்து பாய்ந்து வரும் சுகமளித்தலின் ஓடை" என்று வாசித்துக் கொண்டிருந்தாள். முற்றிலும் சாதாரணமாகவும் நன்றாகவும் இருந்தாள்! என்னே, உடனே அந்த மாரீங்கோ பாப்டிஸ்டு பிரசங்கியாரும், அவர்கள் அனைவரும் அங்கே வந்தார்கள். அவள் முற்றத்திற்கு ஓடினாள். அவள் இலைகளை வாழ்த்தினாள். அவள் புற்களை வாழ்த்தினாள். அவள் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தாள். சகோதரனே, சகோதரியே, அது சுமார் ஆறு வருடங்களுக்கு முன்பு நடந்தது. இன்றிரவு, இன்னும் நான் பாஸ்டராயிருக்கும் மில்டவுன் பாப்டிஸ்டு சபையில் ஜார்ஜியா கார்ட்டர் பியானோ வாசித்துக்கொண்டிருக்கிறாள். அவளுக்கு தபால் அனுப்பலாம். Miss ஜார்ஜியா ஜா-ர்-ஜி-யா கா-ர்-ட்-ட-ர், மில்டவுன், இந்தியானா. அவளுடைய தனிப்பட்ட சாட்சியை பெற்றுக்கொள்ளுங்கள். அந்த இரவில் ஜார்ஜியாவை சுகப்படுத்திய அதே மாறாத இயேசு கிறிஸ்து, இன்றிரவும் தெய்வீக பிரசன்னத்தில் நின்றிருக்கும் ஒவ்வொரு தனிப்பட்ட நபருக்கும் அதே காரியத்தை செய்ய இங்கேதான் இருக்கிறார். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? 22. எங்கள் பரலோக பிதாவே, உம்முடைய பிரசன்னம் அருகில் வரட்டும். ஒ தேவனே, தெய்வீக பிரசன்னத்தில் இருக்கும் ஒவ் வொரு நபரையும் அது அபிஷேகிக்கட்டும். இங்கே காத்திருக்கும் கூட்டத்தை தேவனுடைய வல்லமை முழுவதுமாக நிரப்பட்டும். கர்த்தாவே, மனிதர்களும் பெண்களும் தங்கள் முகத்திலிருந்து வியர்வை வடிந்தவர்களாய் அமர்ந்திருக்கின்றனர், அவர்கள் விசுவாசத்தோடு இருக்கிறார்கள். உம்முடைய வார்த்தைக்கு நீர் உத்தமமாய் இருக்கவேண்டும் என்பதை அறிந்தவனாய், தேவனே, இப்பொழுது உம்மிடம் நான் கேட்கிறேன். எங்களுடைய விசுவாசத்தை பொறுத்தே உம்மால் எங்களை சுகமாக்க முடியும். ஆனால் கூடுமானால், கர்த்தாவே, தேவனுடைய தூதர்கள் ஒவ்வொரு வரிசையிலும் வந்து அமரட்டும், இந்த மேடையை சுற்றி, இந்த ஜனக்கூட்டத்தை சுற்றி மேலே இருப்பவர்களையும், கீழே இருப்பவர்களையும் இன்றிரவு இங்கே சந்திக்கட்டும். நான் சாட்சிக்கொடுக்கும் அவரிடம் இருந்து தெய்வீக தொடுதலை ஒவ்வொரு நபரும் பெறட்டும். தேவனே, இன்றிரவு அருளும், அதாவது எங்களுடைய ஜீவியத்தின் எல்லா நாட்களிலும் இதுவரை நாங்கள் பார்த்ததிலேயே இந்த இரவு ஒரு மகத்தான இரவாக இருக்கட்டும், தேவனுடைய வல்லமை இந்த கட்டிடத்தை முழுவதுமாக மூடி மறைத்துக் கொள்ளட்டும். விசுவாசத்தோடு காத்திருந்து விசிறியால் விசிறி கொண்டிருக்கும் இந்த ஜனங்களை, தேவனுடைய ஆவி இவர்களில் ஒவ்வொருவர் மீதும் நகர்ந்து சென்று இன்றிரவு இந்த கட்டிடத்தில் இருக்கும் ஒவ்வொரு நபரையும் சுகமாக்கட்டும். அதை அருளும், நித்திய தேவனே, உம்முடைய குமாரன் இயேசு கிறிஸ்துவின் நாமத்தால், ஆமென். அன்பான சகோதரர்களே, ஜெபியுங்கள். நமக்காக ஏதோவொன்றை தேவன் இன்றிரவு செய்ய போகிறார் என்று நான் விசுவாசிக்கிறேன். 23. ஜனங்களே, நீங்கள் இதை எனக்காக செய்வீர்களா? நீங்கள் காத்திருந்து கவனிப்பீர்களா, சிறிது நேரத்திற்கு முன்பு செய்யப்பட்ட ஜெபத்திற்கு பதில் தரும் விதத்தில், பரிசுத்த ஆவியானாவர் உங்களை தொடும் முதல் தொடுதலுக்கு, நீங்கள் எழுந்து நின்று தேவனை மகிமை படுத்துவீர்களா? இங்கே காரியங்கள் நடக்கையில், தேவன் தன் ஜனங்களினூடாக ஆவியில் நகர்ந்து செல்கி றார். தேவன் யாருக்காவது ஏதேனும் செய்யும்போது, அப்பொழுது நீங்கள் எழுந்து நின்று உங்களுடைய சுகமளித்தலையும் ஏற்றுக் கொள்ளுங்கள். உங்களிடம் நான் கூறுகிறேன், நீங்கள் அதை செய்தால், ஒரு மகிமையின் அலை இந்த கட்டிடத்தை அடிக்கும், மேலும் பரிசுத்த ஆவி அதில் விழும்போது, அப்பொழுதுதான் தண்ணீர் கலக்கப்படுகிறது. சரியாக அந்நேரத்தில் நீங்கள் உள்ளே இறங்கி உங்களுடையதை பெற்றுக்கொள்ளுங்கள். உங்களில் ஒவ்வொரு வருக்கும் என்னால் ஊழியம் செய்ய முடியாது. ஆனால் ஒரே சமயத்தில் உங்களில் ஒவ்வொருவரையும் பரிசுத்த ஆவியால் தொட முடியும். அதை நீங்கள் விசுவாசிக்கவில்லையா? அப்படியானால் தேவனிடம் அந்த பொறுப்பை ஒப்படைத்து விட்டு இந்த கட்டடத்தை விட்டு செல்லுங்கள். அதை பற்றி சாட்சி கூறுங்கள்; உங்கள் முழு இருதயத்துடனும் அதை விசுவாசியுங்கள்; அதை பற்றிப் பிடித்துக்கொண்டு, என்ன சம்பவிக்கிறது என்பதை கவனியுங்கள். தேவன் பதில் தருவார். ஆமென். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? 24. எத்தனை அட்டைகளை நீங்கள் அளித்தீர்கள்? எல்லாம் சரி. இதிலிருந்து தொடங்குங்கள், கொஞ்சம் வரிசையை சரிபடுத்துங்கள். அவர் F 51-ல் இருந்து கொடுத்திருக்கிறார். சரியாக இங்கிருந்து தொடங்குங்கள், 51, 52, 53, 54, 55, அங்கு உங்களால் எத்தனை பேர் நிற்க முடியுமோ நில்லுங்கள், நான் நினைக்கிறேன். அது சரியாக அது வரை... நல்லது, நீங்கள் பெற்றுக் கொள்ளலாம்... அங்கு பத்து பேருக்கு அதிகமாக உங்களால் நிற்க வைக்க முடியுமா? எல்லாம் சரி, முதல் பத்து பேரை முயற்சி செய்யுங்கள், பின்பு அதற்கு பின்னர் இன்னும் கொஞ்சம் பேரை கொண்டு வரலாம். 51 முதல் 60, அது ஆறு... 51 முதல் 60. மேலும் அந்த கூட்டம் கீழே இறங்கியவுடன், அவர்கள் படியிரங்கியவுடன், கொஞ்சம் இடமிருந்தால், மேலே ஏறிவிடுங்கள். அங்கு கொஞ்சம் 61,62,63,64,65 முதல் தொடங்கி 70 வரை. அந்த கூட்டம் கீழே இறங்கியவுடன், 80 வரை ஆரம்பிக்கலாம். அப்படியே செல்ல லாம். பின்பு அது முடிந்த... சரியாக அந்நேரத்தில், உங்களில் ஒவ்வொருவரும் சரியான நிலையில் இருக்க வேண்டும், நீங்கள் ஒவ்வொருவரும் சுகம் பெறும்படி பரிசுத்த ஆவி இந்த கட்டடத்தில் விழும். சகோதரன் பாக்ஸ்டர், நீங்கள் ஆரம்பிக்கலாம். எல்லாம் சரி, நாம் உடனே தொடங்க போகிறோம், அவர்கள்- அவர்கள் அங்கே அவர்களை அழைத்து வரிசை படுத்தும் நேரத்தில் - வாயில் காப்போர் (ushers) ஜனங்களை ஆயத்தம் செய்கின்றனர். எல்லாம் சரி. 25. எங்கள் மூலமாய் கேள்விப்பட்டதை விசுவாசித்தவன் யார்? அது சத்தியம் என்று விசுவாசிக்கிறீர்களா? அற்புதம். உங்களில் எத்தனை பேர் இந்த வாரத்தில் சுகமளித்தலை பெற்றுக் கொண்டீர்கள் என்பதை அறிவீர்கள்? உங்களுடைய கரங்களை நாங்கள் பார்க்கட்டும், அங்கே ஜனக்கூட்டத்தில், எங்கேயாவது. சகோதரன் பாக்ஸ்டரே, அங்கே பாருங்கள். அது உண்மை என்பதை நான் அறிவேன். இன்றிரவு, தேவனிடம் இருந்து சுகமளித்தலை பெற்றுக் கொள்ள போகிறோம் என்று எத்தனை பேர் விசுவாசிக்கிறீர்கள்? உங்களுடைய கரத்தை நாங்கள் பார்க்கட்டும். அவர் உங்களை ஒருபோதும் புறம்பாக்க மாட்டார். அவரால் உங்களை புறம்பாக்கவே முடியாது. உங்களை புறம்பாக்க முடியாத ஒருவர் அவர் தான், ஏனெனில் அவர் தேவனாயிருக்கிறார். இப்பொழுது, ஜனங்கள் இவ்விதத்தில் அமர்ந்திருக்கும் வரை, இங்கே அமர்ந்திருக்கையில், நண்பர்களே, இந்த ஜனங்களை நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன்; ஒன்று, இரண்டு, மூன்று சக்கர நாற்காலிகளை நான் பார்க்கிறேன், நான்கு சக்கர நாற்காலிகளை. இப்பொழுது, அதில் மீதி இருப்பது, ஆம், ஐந்து, இங்கே ஒருவர் அமர்ந்திருக்கிறார். 26. இப்பொழுது, சக்கர நாற்காலிகளில் இருக்கும் ஜனங்களே, உங்களுடைய பிரச்சனை... என்று நினைக்காதீர்கள். இப்பொழுது, நீங்கள் செய்யவேண்டியது என்னவென்றால் இதுதான்: உங்களுடைய சுகமளித்தலை ஏற்றுக்கொள்ளுங்கள். பாருங்கள்? "இப்பொழுது நான் சுகமானேன். சரியாக இப்பொழுதே நான் சுகமானேன்" என்று கூறுங்கள். பாருங்கள்? மேலும் அதை விசுவாசித்துக்கொண்டே இருங்கள். நீங்கள் போதுமான விசுவாசத்தை, எழுந்து நிற்கும்படி போதுமானதை மட்டும் பயிற்சி செய்தால், தேவன் அதை எனக்கு காண்பிப்பார், பின்பு நீங்கள் எழுந்து நிற்கலாம், அன்றொரு இரவில் அங்கு உட்கார்ந்திருக்கும் அந்த சீமாட்டி செய்தது போன்று. அந்த சீமாட்டி அந்த சக்கர நாற்காலியில் உட்கார்ந்திருந்ததை நீங்கள் பார்த்தீர்களா, நிமிர்ந்து அப்படியே நிமிர்ந்து உட்கார்ந்திருந்ததை. நான் அங்கு பார்த்த போது அவளை கண்டேன். அவள் மருத்துவரிடம் சென்றதையும் மற்ற எல்லாவற்றையும் நான் கண்டேன். உங்களுக்கு தெரிய வேண்டிய முதல் காரியம், அவள் அவ்வாறு நடப்பதை நான் கண்டேன். "எழுந்து நில், அது முடிந்தது" என்று கூறினேன். ஏனெனில் தேவன் அவளை முழுவதும் சுகமாக்கினார். இப்பொழுது, நீங்கள் ஜெபத்தில் இருங்கள், மேலும் நாங்கள் ஜெபிக்கையில் பயபக்தியோடு இருங்கள். எல்லாம் சரி. 27. தேவன் ஜெபத்திற்கு பதிலளிப்பார் என்று நான் விசுவாசிக்கிறேன். நான் ஒவ்வொன்றையும் ஆயத்தம் செய்கிறேன், எனவே அது... நான் அதை விசுவாசிக்கிறேன், நீங்கள் விசுவாசிக்கவில்லையா? இன்றிரவு ஏதோவொன்று நடக்க போகிறது என்பதை நான் விசுவாசிக்கிறேன். நான் அதை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். என்னால் அதை உணர முடிகிறது. எல்லாம் சரி. ஐயா, நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்? இப்பொழுது நீங்கள் விசுவாசிக்க போகிறீர்களா? எல்லாம் சரி. விசுவாசமாயிருங்கள். இங்கிருக்கும் நீங்கள் அனைவரும் சேர்ந்து விசுவாசிக்க போகிறீர்களா? இங்கிருப்பவர்கள், இங்கே பின்னாடி இருப்பவர்கள், உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசிக்க போகிறீர்களா? எல்லாம் சரி, இப்பொழுது அது சரியாயிருக்கிறது. எல்லாம் சரி, சகோதரனே. நான்... பேசிய பிறகு, அது என்னை கொஞ்சம் பாதிப்படைய செய்கிறது, உங்களுக்கு தெரியுமா, எனக்கு ஏற்படுகிறது... அது மனிதர்களுக்கான பதட்டம் என்று நான் நினைக்கிறேன், உங்களுக்கு தெரியுமா, அது சற்றே... அது அவ்விதத்தில் தான் நடக்கிறது என்று நான் நினைக்கிறேன். ஆனால், எப்படியாயினும், அந்த கர்த்தருடைய தூதனானவருடைய அபிஷேகத்திற்காக என்னை நானே அமைதிப்படுத்திக் கொள்ள வேண்டும். இப்பொழுது, அது அது உங்களை சுகமாக்கும் என்று நான் உங்களுடைய சுகமளித்தலில் எதையும் கூறவில்லை. அது செய்யபோவதில்லை: ஒருவேளை உங்களுடைய விசுவாசத்தை மட்டும் அதிகமாக்கலாம் (உங்களுக்கு புரிகிறதா?), அல்லது அதுபோன்ற ஏதோவொன்றை செய்யலாம். 'ஏனெனில் நீங்களும் நானும் அந்நியராயிருக்கிறோம் என்று நான் யூகிக்கிறேன். உங்களை எப்பொழுதாவது சந்தித்திருக்கிறேன் என்று எனக்கு தோன்றவில்லை. உங்களை எனக்கு தெரியாது. [ஒலிநாடாவில் காலியிடம்- ஆசி] 28. உங்களுக்கு, உங்களுக்கு தலைவலி அல்லது வேறேதோ இருப்பது போன்றிருக்கிறது. ஒரு விதமான... அது சரியல்லவா, ஏதோ மேலே பிரச்சனையிருக்கிறது... நாம் அதை சைனஸ்(sinus) என்று கூறலாம். நீங்கள் அவ்விதத்தில் உட்கார்ந்திருப்பதை நான் காண்கிறேன். உங்களுக்கு புரிகிறதா? மேலும் உங்களுக்கு - ஒரு விதமான மயக்கமும் வருகிறது, உங்களுக்கு வருகிறதுதானே? மிகவும் பெலவீனமாகி விடுகிறீர்கள். நீங்கள் ஒரு ஊழியக்காரரும் நீங்கள் சுவி கூட உங்களை நான் காண்கிறேன். நீங்கள் சேஷத்தின் ஊழியக்காரர். நான் அதை காண்கிறேன். உங்களுக்கு இருதய கோளாறும் இருக்கிறது; உங்களுக்கு மூச்சித்திணறல் இருக்கிறது, அது உண்மைதானே? நீங்கள் பிடித்திருப்பதை நான் காண்கிறேன் உங்களுடைய.... ஊழியக்கார சகோதரனே, அது இங்கே வாருங்கள். நாம் உண்மைதானே? ஒரு நிமிடம் சகோதரர்கள். 29. எங்கள் பரலோக பிதாவே, என்னுடைய அன்பான சகோதரனுக்காக நான் இரக்கத்தை கேட்கிறேன். மேலும் இப்பொழுது இங்கே இருக்கும் உம்முடைய ஆவி என்னுடைய சகோதரனை ஆசீர்வதிக்கும்படி நான் ஜெபிக்கிறேன். கர்த்தாவே, அவர் மீது சென்று, அவரை சுகமாக்கும். இந்த இரவு முதல், இனிமேல், அவர் ஒருபோதும் தொல்லையில்லாமல் இருப்பாராக. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென். சகோதரனே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. இப்பொழுது போகலாம், நன்றாக இருக்கும் படி போகலாம். "தேவனுக்கு ஸ்தோத்திரம்" என்று நாம் கூறலாம். ("தேவனுக்கு ஸ்தோத்திரம்" என்று சபையார் கூறுகின்றனர் - ஆசி] ஓ. என்னே! இப்பொழுது, நான் அப்படியாக திரும்பியபோது, அது ஒரு முழுமையான பலத்த இழுப்பை உணர்வது போன்றிருக்கிறது. உங்களுக்கு அறுவை சிகிச்சை நடந்தது. நான் இருந்தால்... நான் தவறாயிருக்கிறேனா என்று பாருங்கள். நான் இல்லையா... நீங்கள் மூடப்பட்டிருப்பதை நான் காண்கையில், ஆனால் அவர்கள் உங்க ளுடைய சரீரத்திலிருந்து ஏதோவொன்றை அகற்றவில்லையா, ஒரு விலா எலும்பை அல்லது அதுபோன்ற ஏதோவொன்றை? ஓ. உங்களுடைய சரீரத்திலிருந்து ஏழு விலா எலும்புகளை. அந்த அறுவை சிகிச்சை நிபுணர் திரும்புவதை நான் காண்கிறேன். உயரமான ஒருவர், ஒல்லியான மனிதன், அந்த அறுவை சிகிச்சை செய்தவர். அது உண்மைதானே? ஒரு - ஒரு வெண்மையானது அவருடைய முகத்தின் மீது இருந்தது. அவர் திரும்பினார்... அந்த மேஜையிடம் பலர் இருந்தனர். பொன்னிற தலைமுடியுடைய செவிலியர் ஒருவர், ஒருபக்கமாக செல்வதை நான் காண்கிறேன். அப்பொழுதிலிருந்து நீங்கள் பதட்டமாகவும் பெலவீனமாகவும் இருக்கிறீர்கள், சகோதரியே, நீங்கள் அப்படியிருக்கவில்லையா? நீங்கள் மருத்துவ நல்வாழ்விடத்திற்கு (Sanatorium) சென்றீர்கள்; ஒன்றுமே எந்த பலனும் அளிக்கவில்லை. அது உண்மைதானே? இங்கே வாருங்கள். 30. அன்பான பரலோக பிதாவே, இந்த பரிதாபமான மரித்துக் கொண்டிருக்கும் பெண், தனக்கான ஆசீர்வாதத்தை பெற்றுக் கொள்ள அருகில் வந்திருக்கிறாள். நான் நினைக்கிறேன், நீர் என்ன செய்வீரென்று? பிதாவே, நீர் உம்முடைய கரங்களை இவள் மீது வைத்து அந்த பிசாசை நீர் கடிந்துக்கொள்வீரென்று; அவன் உமக்கு செவிகொடுத்தே ஆகவேண்டும். மேலும் இப்பொழுது நீர் உன்னதத்திற்கு ஏறி மனுஷர்களுக்கு வரங்களை அளித்திருக்கையில், இவள்... இவளுக்காக ஜெபிக்கப் பட்டிருக்கிறது, இவளுடைய விசுவாசமானது, கர்த்தாவே விசுவாசிக்க முயற்சிக்கிறது. ஆனால் இவள் மரிக்கும் முன்பு, கர்த்தாவே, இவளுக்கு உதவி செய்யும். இயேசு கிறிஸ்துவை விசுவாசிப்பவனாக, கல்வாரியில் அவர் பட்ட பாடுகளுக்கு பிரதிநிதியாக, சாத்தானே, இந்த பெண்ணை விட்டு போகும்படி இயேசு கிறிஸ்துவின் மூலமாக உனக்கு நான் ஆணையிடுகிறேன், இவளை விட்டு வெளியே வா. இன்றிரவு இங்கிருந்து நீங்கள் சென்று, உங்களால் முடிந்ததை சாப்பிடுங்கள். இன்னும் சில நாட்களில் உங்களை நீங்களே பரிசோதித்து உங்களுடைய சாட்சியை எனக்கு எழுதுங்கள். சகோதரியே. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. மற்றொரு காரியம், நீங்கள் குழந்தையாய் இருந்தது முதல், உங்களால் சரியாக பார்க்க முடியாது, உங்களுடைய கண்களை நீங்கள் மேலே நகர்த்தும்போது, பொருட்கள் மறைகிறது அவ்வளவு கூட.. ? ...அந்த மருத்துவமனையில் நீங்கள் ஏதோவொன்றை வாசிக்கையில், ஒரு தரிசனத்தில். அதை உங்களால் அருகில் கொண்டு வர முடியவில்லை...? இங்கிருப்பது போன்று இல்லை... ?... ...ஓ, இல்லை நான் தரிசனத்தில் கண்டதை இவளிடம் கூறிக்கொண்டிருக்கிறேன், அது நடந்தது...?... அது... "கர்த்தருக்கு ஸ்தோத்திரம்" என்று நாம் கூறலாம். [சபையார் "கர்த்தருக்கு ஸ்தோத்திரம்" என்கிறார்கள் - ஆசி] எல்லாம் சரி, அந்த சீமாட்டியை அழைத்து வாருங்கள். இப்பொழுது, உங்களால் முடிந்த அளவுக்கு நீங்கள் ஒவ்வொருவரும் பயபக்தியாயிருங்கள். 31. [ஒலிநாடாவில் காலியிடம் - ஆசி] இப்பொழுது, இந்த மற்ற கையை தூக்கி, அதை உணருங்கள், அந்த கையில் இங்கே தொடுங்கள். பாருங்கள்? நான் கூறுவது புரிகிறதா? இப்பொழுது, அது வெறும்... அது சரியாக என் இருதயத்திற்கு வருகிறது. அது ஒருவிதமாக ர்ர்ர்ர்ர் போன்றிருக்கிறது, அது அந்த புற்றுநோய். அது ஜீவித்துக்கொண்டிருக்கிறது. இப்பொழுது, வேதவாக்கியம் கூறு கிறது... இப்பொழுது, உங்களை கவனிக்கையில், அந்த புற்று நோய் உங்கள் தொண்டையிலிருக்கிறது, இல்லையா? அது உண்மைதானே? ஆம், அம்மையாரே. அது எங்கே இருக்கிறது என்பதை நான் காண்கிறேன்... 'ஏனெனில், உங்களால் அதை உங்களால் வெளியே சொல்ல முடியாது, ஆனால் உங்களால் முடியும்...?...தரிசனத்தின் மூலமாக. இப்பொழுது, வேறு மனிதன் அங்கே கையை வைக்கும் போது அதில் எந்த வித்தியாசமும் இருக்காது என்பது விசித்திரமாக இல்லையா? பின்பு நீங்கள் இங்கே வந்து உங்கள் கையை அங்கே வைக்கும்போது, அது அங்கே தான் இருக்கிறது. இல்லையா? இப்பொழுது, அப்படியானால், என்னை அபிஷேகித்த ஏதோவொன்று இங்கிருக்கிறது. உங்களில் இருக்கும் பிரச்சனை என்னவென்பதை அதினால் அறிந்துகொள்ள முடியும். அது உண்மை தானே? இங்கே இருப்பது என்னவென்றால்: நான் காண்பித்த அந்த கர்த்தருடைய தூதனானவருடைய படத்தை நீங்கள் பார்த்தீர்களா? நீங்கள் பார்த்திருக்கிறீர்கள். இப்பொழுது, அதுதான் இங்கே இருக்கிறது. ஆம். இங்கே நான் காண்பித்த அந்த படத்தில், நான் நின்றிருந்த இடத்தில், அந்த தூதனானவருடைய படம் மேலே இருந்தது, 32. இப்பொழுது, இப்பொழுது, உங்களிடம் ஏதோவொரு பிரச்சனை இருக்கிறது (பாருங்கள்?), ஒரு புற்றுநோயிருக்கிறது. நீங்கள் உங்கள் கையை இங்கே வைக்கும்போது, நாம் தொட்ட மாத்திரத்தில், ஏதோவொன்று குதிக்கிறது. இப்பொழுது, அது என்னவாயிருக்கிறது? அது உங்களில் இருக்கும் புற்றுநோய், மேலும் கர்த்தரு டைய தூதனானவர் இங்கே இருக்கிறார். இப்பொழுது, புற்று நோய் உங்களை பிடித்து வைக்க முயற்சிக்கிறது, தேவனோ உங்களுக்கு சுகத்தையளிக்க விரும்புகிறார். இப்பொழுது, என்னால் அதை துரத்த முடியாது, ஆனால் இயேசு கிறிஸ்துவில் இருக்கும் உங்களுடைய விசுவாசம் அதை உங்களில் இருந்து துரத்தும். பாருங்கள்? புற்றுநோய் ஒரு ஜீவனாயிருக்கிறது. இப்பொழுது, புற்றுநோய் என்றால் என்ன? அது ஒரு கிருமி. அது செல்களின் வளர்ச்சியாயிருக்கிறது. அது உங்களுடைய கழுத்தில் இருந்தயே உங்களுடைய இரத்தத்தை உறிஞ்சுகிறது, சீக்கிரத்தில் நீங்கள் மரித்துவிடுவீர்கள். பாருங்கள்? இப்பொழுது, இப்பொழுது தெய்வீக சுகமளித்தலின் வழியில், நீங்கள் அந்த புற்றுநோயாயிருந்தால், உங்களிலிருந்து உங்களுடைய ஜீவனை நான் வெளியே அழைப்பேன், உங்களுடைய சரீரம் மரித்ததாய் கீழே விழுந்து விடும். சிறிது நேரம் கழித்து நீங்கள் அழுகி போய்விடுவீர்கள். அது உங்களை விட்டு போய் விட்டால், முதல் சில நாட்களுக்கு நீங்கள் அற்புதமாய் உணருவீர்கள். உங்களுடைய தொண்டை நன்றாக இருக்கும். ஆனால் பின்பு, இது வரை இருந்ததை காட்டிலும் அது மோசமாகும். நீங்கள் பெரிய துண்டுகளையும் மற்றவைகளையும் துப்புவீர்கள். மேலும் பல நேரங்களில், அவ்விதத்தில், ஜனங்கள் மிக அதிகமாக வியாதிப்படும்போது, "என்னுடைய சுகமளித்தலை நான் இழந்து விட்டேன்" என்று கூறுவார்கள். அது உங்களை விட்டு போய் விட்டால், அப்படி கூறுவதை நீங்கள் விசுவாசிக்காதீர்கள். நீங்கள் தொடர்ந்து சாட்சி கொடுத்துக்கொண்டே இருங்கள். அந்த மனிதனிடம், இயேசு அந்த மனிதனிடம், "உன் குமாரன் பிழைத்திருக்கிறான்," என்றார். அவர் கூறியதை அந்த மனிதன் விசுவாசித்தான். பாருங்கள்? உங்களுக்கு கூறப்பட்டதை நீங்கள் விசுவாசியுங்கள். 33. இப்பொழுது, தேவனுடைய ஆவியால் உங்களுடைய பிரச்சனை என்னவென்றும் உங்களுடைய ஜீவியம் என்னவென்றும் என்னால் பார்க்க முடிந்திருந்தால், அது உண்மை என்று உங்களுக்கு தெரியும், இப்பொழுது, அவர் இந்த பக்கமாக என்ன கூறுகிறாரோ, அதுவும் கூட உண்மையாகத்தான் இருக்கும், இருக்கும் தானே? தெரியாமல் இருந்த அதுவே உண்மையென்றால், நன்கு தெரிந்திருக்கும் இதுவும் உண்மையாகத்தான் இருக்கும். அது சரிதானே? இப்பொழுது, நீங்கள் உங்களுடைய கையை மீண்டும் இங்கே வைக்கவேண்டுமென நான் விரும்புகிறேன். நீங்கள் கவனிக்க வேண்டுமென விரும்புகிறேன். இப்பொழுது, நீங்கள் பார்க்க வேண்டுமென நான் விரும்புகிறேன்; கையை எங்கே எப்படி வைத்தாலும் பொருட்டல்ல (உங்களுக்கு புரிகிறதா?), எல்லா விடங்களிலும் அது ஒரே மாதிரியே இருக்கிறது ...?... இங்கே. இப்பொழுது, வேதாகமம் கூறுகிறது, "இரண்டு அல்லது மூன்று சாட்சிகளின் வாக்கினாலே, ஒவ்வொரு வார்த்தையும் நிலைவரப்பட வேண்டும்." அது உண்மைதானே? நீங்கள் ஒரு அந்நியராய் வந்திருக்கிறீர்கள். எனக்கு உங்களை தெரியாது. நீங்கள் உங்களுடைய கையை என் கையின் மீது வைக்கும்போது, ஏதோவொன்று திடீரென்று பளிச்சிடுகிறது. அது என்னவென்று உங்களுக்கு நான் கூறுகிறேன். அது ஒரு சாட்சியாயிருக்கிறது, இல்லையா? இப்பொழுது நீங்கள் அதை கவனித்துக் கொண்டிருக்கிறீர்கள். அதை அங்கே பாருங்கள். இப்பொழுது, அதை கவனியுங்கள். நீங்கள் இங்கே அருகில் வரவேண்டுமென நான் விரும்புகிறேன், அப்பொழுது உங்களால் கவனிக்க முடியும். அது எப்படியாக வந்து போகிறது என்பதை கவனியுங்கள். இப்பொழுது, அது அங்கே மரித்துக்கொண்டிருக்கிறது. பாருங்கள்? இப்பொழுது, அது வருவதை நான் உணருகிறேன்... இதோ அது மீண்டும் வருகிறது. இப்பொழுது, அதை பாருங்கள். பாருங்கள்? அது அலை போன்றிருக்கிறது. இப்பொழுது, அந்த புற்று நோய் கொந்தளிக்கிறது. புற்றுநோயின் அந்த ஜீவன், அங்கிருக்கும் கிருமியின் ஜீவன் கொந்தளிக்கிறது. அது ஒரு ஆவியாயிருக்கிறது, ஏனெனில் இங்கே, உங்களுக்கும் எனக்கும் அருகில், ஒன்று நின்று கொண்டிருக்கிறது, உங்களுடைய விசுவாசத்தை கொண்டு அதினால் அந்த ஜீவனை துரத்த முடியும். 34. இப்பொழுது, உங்களுக்காக நான் ஜெபிக்க போகிறேன், ஏனெனில் உங்களுக்கு புற்றுநோய் இருப்பதை நீங்கள் அறிவீர்கள். நீங்கள் மிகவும் பதட்டமாகவும் மனமுடைந்தும் இருக்கிறீர்கள். உங்களுடைய மனதை நான் படிக்கவில்லை. ஆனால் நான் எதை குறித்து பேசிக்கொண்டிருக்கிறேனோ அதை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள், அறிந்திருக்கிறீர்கள் தானே? அதை நான் கூற வேண்டிய அவசியமே இல்லை. ஆனால் இப்பொழுது, இதை துரத்தவே நான் முயற்சிக்கிறேன். இப்பொழுது, நான் ஜெபிக்க போகிறேன், ஜனங்களை அவர்களுடைய தலைகளை தாழ்த்த வைக்கப்போகிறேன். நீங்கள் என்னுடைய கையை கவனிக்க வேண்டுமென நான் விரும்புகிறேன். அது அது சென்று விட்டால், நீங்கள் சுகமாகி விட்டீர்கள். அது மூன்று சாட்சிகளாயிருக்கும். அது உண்மைதானே? அது அங்கேயே இருந்தால், உங்களுக்கு இன்னும் புற்று நோயிருக்கிறது. இப்பொழுது, நினைவில் கொள்ளுங்கள், என்னால் அதை துரத்த முடியாது. இப்பொழுது, நீங்கள் அதை கவனிக்க வேண்டுமென நான் கேட்டதற்கான காரணம் என்னவெனில், உங்களுக்குத்தான் புற்றுநோயிருக்கிறது. அது வெளியே சென்றுவிட்டால், அங்கு பெரிதளவில் புற்றுநோய் இருக்கும். பாருங்கள்? மேலும் இதினால், இப்பொழுது, உங்களுடைய விசுவாசம் தான் அதை துரத்த கூடுமானால், இப்பொழுது, நான் ஜெபிக்கும் போது நீங்கள் விசுவாசிக்க வேண்டுமென நான் விரும்புகிறேன். நீங்கள் என்னுடைய கையை கவனிக்க வேண்டுமென விரும்புகிறேன், அது எந்த பக்கமாவது நகர்கிறதா என்று பாருங்கள். புரிகிறதா? பின்பு அது அப்படியே கீழே இருந்துவிட்டால், வீக்கமானது போய்விடும். அங்கிருக்கும் அதிர்வுகள் போய்விடும், அது இந்த கையை போன்று சராசரியாகிவிட்டால், நீங்கள் சுகமானீர்கள். அது அப்படி ஆகவில்லையென்றால், நீங்கள் சுகமாகவில்லை. பாருங்கள்? அதை பற்றி ஏதேனும் செய்ய என்னிடம் ஒன்றுமே இல்லை. இப்பொழுதிலிருந்து அது உங்களுடைய விசுவாசமாயிருக்கிறது. ஜனங்களே உங்களுடைய தலையை தாழ்த்துவீர்களா? எங்கள் பரலோக பிதாவே, இந்த சிறிய பெண்ணும் மற்றும் இந்த ஊழியக்காரர்களும் அமர்ந்து என்னுடைய கையை பார்த்துக் கொண்டிருக்கும் வேளையில், நீரே தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்பதை அறிந்துக் கொள்ளட்டும், உம்முடைய ஊழியக்காரன் உண்மையைத்தான் கூறுகிறேன் என்பதை அறிந்து க்கொள்ளட்டும்... நீர் தீர்க்கதரிசியாகிய மோசேயிடம், "இந்த இரண்டு அடையாளங்களால், அவர்கள் விசுவாசிப்பார்கள்" என்று கூறினீர். இந்த அடையாளங்கள் இல்லாமலும், இந்த ஜனங்கள் விசுவாசிக்கிறார்கள். அவர்கள் உம்மை விசுவாசிக்கிறார்கள். இப்பொழுதும், பிதாவே, இந்த பரிதாபமான சிறிய பெண்ணிற்காக இரக்கத்தை நான் கேட்கிறேன், இப்படியே இவளால் அதிக நாள் ஜீவிக்க முடியாது என்பதை நாங்கள் அறிவோம். இவள் மீது இரக்கமாயிரும், இவளை சுகமாக்கும், கர்த்தராகிய இயேசுவின் நாமத்தால் இவளுடைய சுகமளித்தலை நான் கேட்கிறேன். 35. இப்பொழுது, என்னுடைய தலையை நான் உயர்த்துவதற்கு முன், அல்லது பார்ப்பதற்கு முன், அது நிற்கவில்லை; அது இன் னமும் ஓடிக்கொண்டே இருக்கிறது. சீமாட்டியே, ஆம் தானே? அது இருந்தது போன்றே இருக்கிறது. இப்பொழுது, ஜனங்களுக்கு கூறுகிறேன், அது நிற்கவில்லை. அது இன்னமும் ஓடிக் கொண்டே இருக்கிறது. இப்பொழுது, என்னால் அதை நிறுத்த முடியாது இப்பொழுது, சகோதரியே, ஏனெனில் ...?... அதை வெளியே அங்கே பாருங்கள். காட்டுகிறது... ? ...ஆனால் இப்பொழுது பாருங்கள்... ?... [ஒலிநாடாவில் காலியிடம் - ஆசி] தேவனுடைய குமாரன் இயேசு கிறிஸ்துவின் பாடுகளின் மூலமாக, உன் மீது அதிகாரம் கோருகிறேன், இந்த பெண்ணை விட்டு வெளியே வா. [ஒலிநாடாவில் காலியிடம்- ஆசி] இப்பொழுது, நண்பர்களே, உங்களிடம் நான் கத்தி பேச முயற்சிக்கவில்லை. உங்களுடைய காதுகளை செவிடாக்க முயற் சிக்கவில்லை. ஆனால் சில நேரங்களில் அந்த பிசாசுகள் கீழ்படி யாமல் இருக்கிறது, அப்பொழுது நீங்கள் அதை துரத்த வேண்டி யிருக்கிறது. அவை சுலபமாக வெளியே போய்விட்டால், எல்லாம் சரிதான், ஆனால் நீங்கள் வீட்டிற்கு வந்து மேலும் நீங்கள் ... உங்களை நான் வெளியே போ என்று கூற, நீங்கள் போய்விட்டால், அது நன்றானது. ஆனால் நீங்கள் உங்களை தூக்கி எறிய வேண்டுமானால், அது வித்தியாசமாயிருக்கிறது. பாருங்கள்? அந்த காரியங்களை நீங்கள் நீங்கள் குழந்தையை போன்று தட்டி கொடுத்துக் கொண்டிருக்க முடியாது. எல்லாம் சரி. அழைத்து வாருங்கள்... 36. நீங்கள் இயேசுவோடு நேசத்தில் இருக்கிறீர்களா? அவர் அதிச யமானவர் அல்லவா? இப்பொழுது, இன்றிரவு அவர் என்னுடைய சூட்டை (suit) அணிந்து சரியாக இங்கே நின்றிருந்தால், உங்களுக்காக அவர் இப்பொழுது என்ன செய்துக் கொண்டிருக்கிறாரோ அதை காட்டிலும் வேறு எதையும் அவரால் உங்களுக்காக செய்யமுடியாது. பிரச்சனை என்னவென்பதை அவரால் அறியமுடியும்; பிரச்சனை என்னவென்று அவரால் உங்களிடம் கூற முடியும், ஆனால் அவர் "பிதா காண்பிக்கிறதேயன்றி வேறெதையும் குமாரனால் செய்யமுடியாது" என்று கூறுவார். அது உண்மைதானே? "இப்பொழுது, நான் செய்யும் இந்த கிரியைகளை, நீங்களும் செய்வீர்கள்" என்று அவர் கூறினார். நத்தானியேல் அவரிடம் வந்தது உங்களுக்கு நினைவிருக்கிறதா, அவனுக்கு கூறப்பட்டது? வேறு வார்த்தைகளில் கூறினால், "உன்னை நான் அறிவேன். நீ ஒரு கிறிஸ்தவன்". "நீர் என்னை எப்படி அறிவீர்?" "பிலிப்பு உன்னை அழைக்கிறதற்கு முன்னே, நீ மரத்தின் கீழிருக்கும்போது, உன்னை கண்டேன் என்றார்." அவர் என்ன செய்தார்? அவர் அவனை தரிசனத்தில் கண்டார். அது உண்மைதானே? 37. இப்பொழுது, ஒரு சிறிய பெண் இங்கே எனக்கு முன்பாக நின்றிருக்கிறாள். எனக்கு நீ அறிமுகமானவள் என்று தோன்றவில்லை. தேனே, நாம் அந்நியர்கள்தானே? எனக்கு உன்னை பற்றி ஒன்றுமே தெரியாது, எனக்கு தெரியுமா? ஒன்றுமே தெரியாது, மேலும் என்ன, கூறுவதற்கு... நீ எங்கே இருந்து வருகிறாய்? ஆன்டாரியோ, கனடாவிலிருந்து. பல மைல்கள் மற்றும் வருடங்கள் வித்தியாசத்தில் நாம் பிறந்திருக்கிறோம். என்னுடைய ஜீவியத்தில் உன்னை நான் ஒருபோதும் சந்தித்ததே இல்லை. இந்த உலகத்தில் உன்னை பற்றி நான் ஏதேனும் அறிந்துகொள்ள வேண்டுமானால், அது நிச்சயமாக இயற்கைக்கு மேம்பட்ட வல்லமையின் மூலம்தான் வரவேண்டும். அது உண்மைதானே? சகோதரன் பாக்ஸ்டரே, உங்களுக்கு இந்த பெண்ணை தெரியுமா? அவரும் கூட கனடாவிலிருந்து வருகிறார். இயேசு கிறிஸ்துவின் மூலமாக நாம் பொதுவான புரிந்துக் கொள்ளுதலோடு சந்திக்கலாம், சந்திக்கலாம் தானே? அது சரி. நீ இன்னும் கொஞ்சம் அருகில் வரவேண்டுமென விரும்புகிறேன். நீ மிகவும் பெலவீனமாயிருப்பதை நான் பார்க்கிறேன். உன்னிடம் என்ன பிரச்சனை இருக்கிறது என்று எனக்கு தெரியாது. ஆனால் நான் உன்னுடன் பேசும்போது, நீயும் என்னுடன் பேசவேண்டுமென நான் விரும்புகிறேன். நீ அப்படி இருக்க எனக்கு விருப்பமில்லை... 38. [ஒலிநாடாவில் காலியிடம் -ஆசி] ஆஸ்துமா, அது ஆஸ்துமா தானே? ஆஸ்துமா பாதிப்பு. மருத்துவமனையில் உனக்கு-உனக்கு பரிசோதனை செய்யப்பட்டது, அல்லது அதற்காக ஏதோவொன்று செய்யப்பட்டது. சொல்லுங்கள், அது உண்மைதானே,? உன் அருகில் ஒரு மருத்துவர் இருப்பதை நான் காண்கிறேன். நான் ஏதோவொன்றை வித்தியாசமாக காண்கிறேன் என்று கூறலாம். உனக்கு விபத்தும் கூட ஏற்பட்டது. உனக்கு விபத்து ஏற்படவில்லையா? உனக்கு அடிபட்டது, அது நீ இல்லையா, ஒரு - ஒரு வாகன விபத்து? அது உண்மைதானே? இப்பொழுது, என்னால் மீண்டும் திரும்ப செல்ல முடிகிறதா என்று பார்க்கிறேன். அந்த மருத்துவரை பற்றி ஏதோவொன்றிருக்கிறது, இல்லையா? நான் பேசுவதை நீ கேட்டாயா? அது நானல்ல. அது - அது நானல்ல. அது என்னுடைய குரலில் இருந்தது, ஆனால் நான் பேசவில்லை. இப்பொழுது, என் மூலமாக என்னவெல்லாம் பேசப்பட்டதோ, அது உன்னிடம் என்னவெல்லாம் கூறியதோ, அதெல்லாம் உண்மையா? இப்பொழுது, சற்றே - சற்றே அது அது உண்மையென்றால் உண்மையா என்று கூறு. அது உன்னுடைய கையை உயர்த்து. அது நீ சிந்தித்துக்கொண்டிருந்த காரியங்களை பற்றியல்ல. நீ அந்த காரியங்களை பற்றி சிந்தித்துக் கொண்டிருக்கவில்லை, நீ சிந்தித்தாயா? ஆகவே அது நான் மனதை படிப்பதாய் இருக்க முடியாது, இருக்க முடியுமா? அது அதையும் தாண்டி பின்னாக செல்ல வேண்டியிருந்திருக்கும், ஆம் தானே?, உன்னை தவிர. பாருங்கள்? அல்லது அது உனக்கு மிக நெருங்கியவர்களுக்கு தெரிந்திருக்குமே தவிர, அந்த காரியங்களை பற்றி இந்த அரங்கத்தில் இருக்கும் யாருமே அதை அறிந்திருக்க மாட்டார்கள் என்று நான் நினைக்கிறேன். 39. இப்பொழுது, உன்னிடம் நான் உண்மையைதான் கூறினேன், நான் கூறவில்லையா? இப்பொழுது, என்னை நீ தேவனுடைய தீர்க்கதரிசி என்று விசுவாசிக்கிறாயா, அதாவது நான் உண்மையைத்தான் கூறினேன் என்று? நான் கூறுவதை நீ செய்வாயா. சகோதரியே, அன்பே, உன்மீது என் கைகளை வைக்கப் போகிறேன். வீட்டில் எனக்கும் ஒரு சிறிய பெண் இருக்கிறாள். அவள் வியாதியாய் இருந்தால் எனக்கு தெரியும்... இப்பொழுது, இயேசு கல்வாரியில் மரித்தபோது என்ன கூறினாரோ அதை நினைவுக் கூரும்படியாக, அவர் உன்னை சுகமாக்கிவிட்டார். இப்பொழுது, அவருடைய பிரசன்னம் என்று நீ விசுவாசிக்கும் ஒரு இயற்கைக்கு மேம்பட்ட ஜீவன், அது இப்பொழுது இங்கிருக்கிறது என்பதை நீ அறிவாய். அது உண்மைதானே? கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தால், என் சகோதரியே உன்னை நான் ஆசீர்வதிக்கிறேன், அதாவது இந்த ஆஸ்துமாவை அவர் உன்னைவிட்டு எடுக்க வேண்டுமென்று. இன்றிரவு, மீண்டுமாக நீ அந்த இனிமையான தேசத்திற்கு செல்ல, உன்னுடைய ஜீவியத்தின் எல்லா நாட்களிலும் ஒரு நல்ல பெண்ணாக இருப்பதற்கும், உனக்கான தேவனுடைய கிருபையை பற்றி சாட்சிக்கொடுக்கவும் நீ இங்கிருந்து கடந்து செல்வாயாக. உன்னுடைய சமுதாயத்தில் ஒரு பழைய பாணியிலான எழுப்புதலை ஆரம்பிக்க அவர் உன்னை பயன் படுத்துவாராக. இந்த ஆசீர்வாதங்களை இயேசு கிறிஸ்துவின் நாமத்தால் உன் மீது வைக்கிறேன். ஆமென். 40. நீ என்ன நினைக்கிறாய், நீ சுகமாகிவிட்டாயா? எல்லாம் சரி, நீ சுகமாகிவிட்டாய். இப்பொழுது, நீ சுகமானவளாக மேடையிலிருந்து கீழே செல்லலாம். சகோதரியே, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. "தேவனுக்கு ஸ்தோத்திரம்" என்று நாம் கூறலாம்.